×

கறம்பக்குடி அருகே மது பதுக்கி விற்றவர் கைது

கறம்பக்குடி, ஏப்.13: கறம்பக்குடி பகுதியில் அனுமதியின்றி மதுபானம் பதுக்கி விற்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து கறம்பக்குடி எஸ்எஸ்ஐ ராமையன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கறம்பக்குடி அருகே நரங்கியபட்டு கிராமத்தை சேர்ந்த இளையராஜா(30) என்பவர் அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்துகொண்டிருந்தார். இதையடுத்து அவரை கையும் களவுமாக பிடித்த கறம்பக்குடி போலீசார் அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்தனர்.

Tags : Karambakudy ,
× RELATED புதுக்கோட்டையில் 27வது நாளாக தொடரும் போராட்டம்