அரியலூர் கலெக்டர் அறிவுரை காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,ஏப்.13:சிறப்பு காலமுறை ஊதியம் மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9,000 வழங்க வேண்டும். எரிவாயு சிலிண்டர்களை தேவைக்கேற்ப அரசு வழங்க வேண்டும். சமையல் உதவியாளர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். அரசு ஊழியருக்கு வழங்குவது போல் மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும். வேலைநிறுத்த காலத்திற்கான ஊதியம் வழங்கவேண்டும். விலையேற்றத்துக்கு ஏற்ப உணவூட்டு செலவினம் ரூ.5ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக தமிழகம் முழுக்க அனைத்து ஒன்றிய அலுவலகங்கள் முன்பு நேற்று கவனயீர்ப்பு பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய நான்கு ஒன்றிய அலுவலகங்கள் முன் கவனயீர்ப்பு பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. இதன்படி பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் லதா தலைமை வகித்தார். இதேபோல் வேப்பூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமி தலைமை வகித்தார். இதே போல் ஆலத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பும், வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகம் முன்பும் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.

Related Stories: