மயிலாடுதுறை அருகே அனுமதியின்றி செயல்பட்ட பாருக்கு சீல் வைப்பு

மயிலாடுதுறை, ஏப்.13: மயிலாடுறை மாவட்டத்தில் 45 டாஸ்மாக் கடைகளில் 17 கடைகளில் பார் ஏலத்திற்கு தமிழக அரசு அறிவித்தும் அவற்றை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. மாவட்டத்தில் 3 கடைகள் மட்டுமே பாருக்கான லைசென்ஸ் எடுத்துள்ளது. இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பார் நடந்து வருகிறது. இதனால் அரசுக்கு வரக்கூடிய வருமான இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது, மயிலாடுதுறை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வாசுதேவன் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று அனுமதியில்லாமல் நடந்த பார்களை பூட்டி சீல் வைத்து வருகின்றனர். மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில், ஆக்கூர் மற்றும் திருக்கடையூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனைக்கு சென்றபோது அனுமதியில்லாமல் பார் நடந்து வந்தது அதிகாரிகளைக் கண்டதும் பார் நடத்தியவர்கள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பாரை பூட்டி சீல் வைத்தனர்.

Related Stories: