×

இடைக்கழிநாடு பேரூராட்சியில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு அடையாள அட்டை விநியோகம்: க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு, அடையாள அட்டைகளை சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பெற்றவுடன் தமிழகத்தில் உள்ள பின்தங்கிய பேரூராட்சிகளை தேர்வு செய்து, அங்குள்ள ஏழை, எளியவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க ஆணை பிறப்பித்தது. அதன்படி, பின் தங்கியுள்ள பல பேரூராட்சிகளை தேர்வு செய்து, மக்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்தின் 21 கிராமங்களை கொண்ட இடைக்கழிநாடு பேரூராட்சியில், 100 நாள் வேலை வழங்க தமிழக அரசு தேர்வு செய்தது.

இதைதொடர்ந்து, அங்கு வசிக்கும் ஏழை, எளியவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று பேரூராட்சி வளாகத்தில் நடந்தது. செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இதில், பேரூராட்சி செயலாளர் இனியரசு, சித்தாமூர் ஒன்றிய செயலாளர் சிற்றரசு, துணை செயலாளர்கள் ரஞ்சித்குமார், மோகன்தாஸ், அஞ்சுகம் சங்கர், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் பாரத், விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், கட்சி நிர்வாகி அகிலன், அவைத்தலைவர் காஜா மொதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : K. Sundar ,
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை 5 லட்சம்...