அயோத்தியாப்பட்டணத்தில் மழை

அயோத்தியாப்பட்டணம், ஏப்.12:கோடை காலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மதிய வேளையில் அனல் காற்று வீசுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதியில் மதியம் 2 மணி வரை வெயில் சுட்டெரித்தது. இதன்பிறகு, அயோத்தியாப்பட்டணம், காரிப்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதியில் மதியம் 3 மணியளவில் மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: