திருவில்லிபுத்தூர் நகராட்சி கூட்டம்

திருவில்லிபுத்தூர், ஏப்.12: திருவில்லிபுத்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக நேற்று நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் தங்கம் ரவி கண்ணன் தலைமை வகித்தார். இதில் துணைத்தலைவர் செல்வமணி, நகராட்சி கமிஷனர் மல்லிகா, மேலாளர் பாபு மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். முதலில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாதாரண கூட்டம் நிறைவடைந்த பின்னர் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: