பெரிச்சிபாளையம் பகுதியில் குடிநீர் வினியோகம் மேயர் தினேஷ்குமார் ஆய்வு

திருப்பூர், ஏப் 12: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தினமும் ஆய்வு செய்து வருகிறார். பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். குடிநீர், குப்பை, சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.  தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் அனைத்து தரப்பினருக்கும் சீராக கிடைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். அதன்படி நேற்று பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். குடிநீர் இருப்பு மற்றும் வருகை, வினியோகம் செய்யப்படும் பகுதிகள் குறித்து இந்த ஆய்வு நடந்தது. இதில் வட்ட செயலாளர் ஆதவன் முருகேசன் மற்றும் கவுன்சிலர் ஆனந்தி சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: