கோவை, ஏப்.12: கோவை எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில், தோழர்களே அமைப்பு சார்பில் சமூக மேம்பாட்டு பணி நடந்தது. ‘’வணக்கம் தோழர்களே’’ அமைப்பு மக்களின் வாழ்வை மேம்படுத்த பல வழிமுறைகளை மேற்கொள்கிறது. மூன்றாம் பாலித்தினருக்கு சிறு, குழு தொழில் செய்வதற்கான உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நடன கலைஞர்களுக்கான உதவித்தொகை வழங்குதல் மேற்கொள்ளப்பட்டது. எஸ்.என்.எஸ் கல்லூரி முதல்வர் அனிதா, துணை முதல்வர் நரஷே்குமார், முன்னாள் மாணவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்சன், நவீvன் ரோசன், போராசிரியர் உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.