கோபி அருகே முருகன் புதூரில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

கோபி,ஏப்.12: கோபி அருகே  முருகன் புதூரில் உள்ள நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார். கோபி அருகே முருகன்புதூரில் செயல்பட்டு வரும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து கூடுதல் வகுப்பறை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதைத்தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய கட்டிட திறப்பு விழா ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, ஈரோடு வடக்கு மாவட்ட  திமுக செயலாளர் நல்லசிவம், முன்னாள் சிட்கோ சேர்மனும், மாநில திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகியுமான சிந்து ரவி, கோபி நகராட்சி தலைவர் நாகராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: