காசிபாளையம் பேரூராட்சியில் ஒன்றிய அரசை கண்டித்து காங். கவுன்சிலர் வெளிநடப்பு

கோபி,ஏப்.12: கோபி அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சியில் நேற்று வரி உயர்வு குறித்த அவசர கூட்டம் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் செயல் அலுவலர் ஜனார்த்தனன்  முன்னிலையில் நடையெற்றது. கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் 11, காங்கிரஸ் 1, சுயேட்சை 1, அதிமுக 1 உட்பட 15 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும், சொத்து வரி, விட்டு வரி, காலியிட வரி என பல்வேறு வகையான வரியினங்களை 100 சதவீதம் வரை உயர்த்தலாம் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12வது வார்டு கவுன்சிலர் கோதண்டன், காசிபாளையம் முழுவதும் கிராமப்புற பகுதியாக இருப்பதால் 100 சதவீதம் வரை வரியை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த செயல் அலுவலர், தமிழகம் முழுவதும் அனைத்து பேரூராட்சிகளிலும் வரியினங்கள் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், அதனடிப்படையிலேயே காசிபாளையம் பேரூராட்சியிலும் வரி உயர்த்தப்படுவதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து பேரூராட்சி கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கோதண்டன் வெளிநடப்பு செய்தார்.

இதுகுறித்து கோதண்டன் கூறும்போது, தமிழக அரசை சொத்து வரியை உயர்த்த ஒன்றிய அரசு நிர்பந்தம் செய்ததன் விளைவாகவே தற்போது 100 சதவீதம் வரை வரியினங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. காசிபாளையம் போன்ற கிராமப்புற பேரூராட்சிகளில் 100 சதவீத வரி உயர்வு என்பது பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் என்பதால், வரி உயர காரணமாக உள்ள மத்திய அரசை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: