திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரில் கே.எம்.எஸ். ஹக்கீம் கல்யாண பிரியாணி ஹோட்டல்

திருச்சி, ஏப்.11: திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரில் கே.எம்.எஸ் கல்யாண பிரியாணி ஹோட்டல் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். சிஎஸ்ஐ பிஷப் சந்திரசேகரன், திருவரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹோட்டலை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு திறந்து வைத்தார். முதல் விற்பனையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தொடங்கி வைத்தார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவரும், கே.எம்.எஸ்.கல்யாண பிரியாணி குழுமத்தின் நிறுவன தலைவருமான கே.எம்.எஸ். ஹக்கீம் வரவேற்று, நன்றி கூறினார்.

விழாவில் திருச்சி அரசு மருத்துவமனை முன்னாள் துணை முதல்வர் டாக்டர் அலீம், சோழா மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் முகமது ஹக்கீம், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்ட திமுக துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் தர், மாநில துணைத் தலைவர் கந்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஹக்கீம், இளைஞரணி மாவட்ட செயலாளர் மொய்தீன், கோ-அபிஷேகபுரம் கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், தில்லை நகர் பகுதி திமுக செயலாளர் கண்ணன், தொழிலதிபர் வரதராஜன், சென்னை ஹோட்டல் சங்க தலைவர் வசந்த பவன் ரவி, தொழிலதிபர் ஜெயகர்ணா, ஜெய்லா மட்டன், சிக்கன் ஸ்டால் உரிமையாளர் முகமது பிலால்,கனி பிராய்லர்ஸ் உரிமையாளர் கனி, திருச்சி காந்தி மார்க்கெட் எஸ்.ஆர்.எம்.காய்கறி கமிஷன் மண்டி அப்பாத்துரை ராவுத்தர் மற்றும் தொழிலதிபர்கள், வியாபார சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: