தி.பூண்டி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தேங்கி கிடக்கும் மழை நீரை வெளியேற்ற கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, ஏப். 11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், உழவர் சந்தை இயங்கி வருகிறது. இதில் வேளாண்மை துறை அலுவலகம், உழவர் சந்தைக்கு செல்லும் சாலையில் சிறிய மழை பெய்தால் கூட மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த வளாகத்தை சுற்றி மழைநீர் நிற்கிறது. மழைநீர் வடிய வடிகால்கள் எதுவும் இல்லை. ஒருநாள் மழைக்கு இவ்வளவு மழைநீர் தேங்கி நின்றால் தொடர் மழை பெய்தால் இந்த வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அலுவலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகால் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: