கறம்பக்குடியில் இல்லம் தேடி கல்வி மையத்தின் சார்பில் உலக சுகாதார தினம்

கறம்பக்குடி, ஏப்.11: கறம்பக்குடியில் ஊராட்சி ஒன்றிய அனுமார் கோயில் தொடக்க பள்ளி மருத்துவர் காலனி பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தின் சார்பாக உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை பேரூராட்சி திமுக தலைவர் முருகேசன் தலைமை வகித்து சுகாதார தின விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். சுகாதார தினத்தை பற்றி மாணவ, மாணவிகள் பஞ்ச பூதங்களாகிய நீர், காற்று நிலம், ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நீதிமன்ற காட்சி மூலம் எடுத்து காண்பித்தனர். மேலும் மாணவ மாணவிகள் சுகாதார மேம்பாட்டினை பற்றி பேச்சு போட்டி, பாடல், கவிதை, நடனம் போன்றவற்றின் மூலம் எடுத்து கூறி நடித்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் சத்துணவு அமைப்பாளர் குமார், அனுமார்கோயில் தொடக்க பள்ளி ஆசிரியர் கமலக்கண்ணன் மற்றும் செல்வராஜ், பரிமளம், அப்பு, காசி மற்றும் பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த இல்லம் தேடி கல்வி மையத்தில் நடந்த உலக சுகாதார தின விழாவிற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி மைய தன்னார்வலர்களான ஷாலினி, அபிநயா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: