×

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 60 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கமிஷனர் நடவடிக்கை

சென்னை: சென்னையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 60 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில், திருவல்லிக்கேணி பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அயனாவரத்தை சேர்ந்த செல்வம் (எ) அப்பளம் (23), அரசு வேலை வாங்கி தருவதாக பட்டதாரிகளிடம் ரூ.3 கோடி பெற்று மோசடி செய்த பள்ளிக்கரணையை சேர்ந்த ரேணுகா (48), சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் சகாதேவன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இமான் (எ) அரவிந்த் (26), சென்னையில் போலி நிறுவனங்கள் தொடங்கி லேப்டாப், கணினி உள்ளிட்ட பொருட்களை பெற்று பணம் தராமல் மோசடி செய்த ஐதராபாத் சுல்தானா பார்க் பகுதியை சேர்ந்த சையது உசேன் (31), தெலங்கானா மாநிலம் அமீர்பேட்டையை சேர்ந்த ஜலாலுதீன் கான் (50), மெரினா பகுதியில் அஜித்குமாரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழரசன் (22), திருவல்லிக்கேணி நீலம் பாட்ஷா தர்கா பகுதியை சேர்ந்த கார்த்திக் (23), ஆகாஷ் (21)  மற்றும் ரூ.3 கோடி மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நெற்குன்றம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த மோகன்ராஜ் (32) ஆகிய 9 பேர், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags :
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...