தர்மபுரி நகராட்சி அவசர கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேறியது

தர்மபுரி, ஏப்.9: தர்மபுரி நகராட்சி கூட்டத்தில் நேற்று சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக கவுன்சிலர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். தர்மபுரி நகராட்சியில் நேற்று அவரச கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டாண் மாது தலைமை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் சித்ரா, பொறியாளர் ஜெயசீலன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட சொத்துவரி சீராய்வு செய்வதற்காக, பல்வேறு குழுக்களை அமைத்து ஆராய்ந்து, சொத்து வரி சீராய்வு செய்வது அவசியம் என பரிந்துரைத்த தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதன்படி நகராட்சியில் 600 சதுரஅடிக்கு குறைவான குடியிருப்பு, கட்டிங்களுக்கு 25 சதவீதம் சொத்து வரி உயர்வும், 601 முதல் 1200 வரை 50 சதவீதமும், 1201 முதுல் 1800 வரை 75 சதவீதமும், 1800 சதுரஅடிக்கு மேல் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை, பள்ளி, கல்லூரி கட்டிங்களுக்கு 75 சதவீதமும் சொத்து வரி உயர்வு செய்யப்பட வேண்டும் என தீர்மானம் வாசிக்கப்பட்டது. நகராட்சியின் சொத்து வரி உயர்வு தீர்மானத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் 13 பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டத்தை புறக்கணித்து எதிர்ப்பு கடிதத்தை நகராட்சி கமிஷனர் சித்ராவிடம் வழங்கினர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் 19 பேர் ஆதரவுடன், சொத்துவரி சீராய்வு தீர்மானம் நிறைவேறியது.

Related Stories: