×

கமுதி அருகே பங்குனி திருவிழா முளைப்பாரி ஊர்வலம்

கமுதி, ஏப். 9: கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ளது பத்ரகாளியம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மார்ச் 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் காப்புக்கட்டி விரதமிருந்தனர். விழா நாட்களில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் அனைவரும் கோயில் முன்பு பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முளைப்பாரி திருவிழா மேளதாளங்கள், வானவேடிக்கையுடன் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பாரியை தலைமையில் சுமந்து கொண்டு கிராமத்தின் முக்கிய தெருக்களில் ஊர்வலமாக சென்று மலட்டாற்றில் கரைத்தனர். திருவிழா ஏற்பாடுகளை கிராமமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் செய்திருந்தனர்.

Tags : Panguni festival ,Kamuti ,
× RELATED மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில்...