×

குன்னூரில் ராணுவ பகுதிக்கு செல்லும் சாலை முறையாக சீரமைக்காததால் தடுத்து நிறுத்தம்

குன்னூர், ஏப். 9: குன்னூரில் ராணுவ பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை  முறையாக சீரமைக்காததை கண்டித்து அதிமுகவினர் வியாபாரிகளுடன் சென்று பணிகளை தடுத்து நிறுத்தினர். குன்னூர் நகராட்சி 3, 26வது வார்டுகளுக்கு சேர்ந்த பகுதியில் டிடிகே சாலை உள்ளது. இந்த சாலை வெலிங்டன் ராணுவ பகுதிக்கு செல்லும் முக்கிய சாலையாகும். கடந்த பல ஆண்டுகளாக இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்தது. தற்போது, சாலையை சீரமைக்கும் பணிக்காக 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் இரவோடு இரவாக சாலையின் ஒரு பகுதியில் இன்டர் லாக் கற்களை பதித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலையில் புதிதாக பாதிக்கப்படும் கற்கள் மேடும் பள்ளமாக அமைத்து வருவதால் மழை காலத்தில் தண்ணீர் கடைகளுக்குள் புகுந்துவிடுவதாக குற்றம் சாட்டினர்.

இதனை அறிந்து அங்கு வந்த அதிமுக ஒப்பந்ததாரரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் நடைபெற பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலையில் மேடு பள்ளம் இன்றி சாலையை மீண்டும் புதிதாக அமைத்து தருவதாக ஒப்பந்ததாரர் உறுதியளித்தார். பின்னர் அங்கிருந்து வியாபாரிகள் மற்றும் அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

Tags : Coonoor ,
× RELATED குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் 8 நாட்கள் எரிந்த காட்டுத்தீ அணைந்தது