சுப்ரீம் மொபைல்ஸ்சின் 80வது கிளை துவக்கம்

ஊட்டி,ஏப்.9: நீலகிரி மாவட்டம் ஊட்யில் ச சுப்ரீம் மொபைல்ஸ்சின் 80வது கிளையை எல்ஜி விநியோகஸ்தர் வாஸ்து பால் ரஜினிகாந்த் மேத்தா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறப்புவிழாவில் சுப்ரீம் மொபைல்ஸ் இயக்குனர் ராதாகிருஷ்ணன், கட்டிட உரிமையாளர் தேஜஸ், தொழில் அபிவிருத்தி மேலாளர் அரவிந்த் ரமேஷ், மண்டல விற்பனை மேலாளர் அருள்ஜோதி, பிராந்திய விற்பனை மேலாளர் சிவராஜ் மற்றும் சேகர் கிளை விற்பனை மேலாளர் அரவிந்த் மற்றும் லியோ ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுப்ரீம் மொபைல்ஸ்சின் 79 கிளைகள் தமிழகத்தில் செயல்பட்டு வரும் நிலையில் நேற்று ஊட்டியில் கமர்சியல் ரோடு காப்பி ஹவுஸ் எதிரில் 80வது கிளையை திறந்துள்ளது. புதிய கிளையில் அனைத்து முன்னணி பிராண்ட் மொபைல்கள்,லேப்டாப்புகள்,கேஜெட்கள்,டெலிவிஷன்,மற்றும் மொபைலுக்கு தேவையான அனைத்து ஆக்சஸரீஸ் சிறந்த முறையில் விற்பனைக்கு உள்ளது. சிறப்பு விழாவை முன்னிட்டு மொபைல் வாங்கும் அனைவருக்கும் டிராவல் பேக், குக்கர் மற்றும் எண்ணற்ற பரிசுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது மேலும் துவக்க விழாவை முன்னிட்டு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 32 இன்ச் எல்.இ.டி. டிவி 10 ஆயிரதிற்கு வழங்கப்பட உள்ளது.

ஸ்மார்ட்போன் வாங்கும் அனைவருக்கும் ஸ்மார்ட் வாட்ச் ஹோம் தியேட்டர் கேமரா மொபைல் ஆகியவை வழங்கப்பட உள்ளது. மேலும் ரூ.ஒரு லட்சம் வரை உடனடி கடன் அப்ரூவல் மற்றும் தங்களது பழைய மொபைல்கள் மற்றும் லேப்டாப்களுக்கு சிறந்த எக்சேஞ்ச் விலை மற்றும் கேஷ்பேக் ஆபர் போன்ற சலுகைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: