×

மண் வளப் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா தலைமையகத்தில் சத்குரு உரையாற்றினார்

கோவை, ஏப்.9:  “மண் அழிவை தடுத்து, அதன் வளத்தை மீட்டெடுக்க உலகெங்கும் உள்ள மக்கள் இப்போதே குரல் கொடுக்க வேண்டும்” என ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் சத்குரு பேசினார். ஐ.நா தலைமையகத்தில் சத்குரு  பேசியதாவது: நம்முடைய வாழ்விற்கும் நம்மை சுற்றியுள்ள மற்ற உயிரினங்களின் வாழ்விற்கும் மண் தான் அடித்தளமாக உள்ளது. மண் வளமாக இருந்தால் தான் நாம் நலமாக இருக்க முடியும். உலகின் பல நாடுகளில் மண் தனது வளத்தை வேகமாக இழந்து, அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இப்படியே சென்றால், உலக அளவில் மிகப் பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் என ஐ.நா எச்சரித்துள்ளது. மேலும், மண் முற்றிலுமாக வளம் இழந்து தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும், உள்நாட்டு கலவரங்கள் உருவாகும், மக்கள் பெருமளவில் இடம்பெயர வேண்டிய அவலநிலையும் உருவாகும் என கூறியுள்ளது.
எனவே, மண் வளத்தை பாதுகாப்பதற்கு தேவையான சட்டங்கள் இப்போதே இயற்றப்பட வேண்டும். மண் அழிவை தடுப்பதற்கும், அதன் வளத்தை மீட்டு எடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளில் அரசாங்கங்கள் ஈடுப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Satguru ,UN Headquarters on Soil Conservation ,
× RELATED சத்குருவின் விருப்பப் பாடலை பாடிய...