×

தடையை மீறி ஆர்ப்பாட்டம் கெங்கவல்லியில் 60 பேர் மீது வழக்கு

கெங்கவல்லி, ஏப்.8: கெங்கவல்லியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக, தாலுகா அலுவலகம் பின்புறம் இடம் தேர்வு செய்யும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆணையம்பட்டியில் அமைக்க கோரியும், நேற்று முன்தினம் அனைத்துக்கட்சி சார்பில், கெங்கவல்லி கடை வீதியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக்கட்சியைச் சேர்ந்த 60 பேர் மீது கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், கெங்கவல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Kengavalli ,
× RELATED ஏரியில் தீ விபத்து