மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

திருச்செங்கோடு, ஏப்.8: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட அவை தலைவர் நடனசபாபதி தலைமையில் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் யுவராஜ்

வரவேற்றார். இதில் துணை செயலாளர் சுகந்தி மணியம், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் பரமானந்தம், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், பழனிவேல், தங்கவேல், செல்வராஜ், சண்முகம், தங்கவேல், நகர செயலாளர்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், செல்வம், பேரூர் செயலாளர்கள் மணிமாரப்பன், ரமேஷ்பாபு, திருமலை, கருணாநிதி, மகாமுனி, ராமலிங்கம் கார்த்திராஜ், ராமமூர்த்தி, நிர்வாகிகள் ஜிஜேந்திரன், ரவிச்சந்திரன், பூங்கோதை செல்லதுரை, ராஜமாணிக்கம், சரவணமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்து பேசினார்.  கூட்டத்தில் வருகிற 10ம் தேதி குமாரபாளையம் நகர பஸ் நிலையம் அருகில் மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

Related Stories: