பெரியகுளத்தில் சிறப்பு முகாம்

பெரியகுளம், ஏப்.8: பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு சலுகைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், பெரியகுளம் வட்டாட்சியர் ராணி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Related Stories: