அரசு கலைக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருப்புத்தூர், ஏப்.8: திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத் துறையின் சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முத்துசாமி தலைமை வகித்தார். கவுரவ விரிவுரையாளர் ரமேஷ் வரவேற்றார். அடிப்படை உரிமைகள், உரிமையியல் சட்டங்கள், போக்குவரத்து சட்டங்கள், போக்குவரத்து விதிமுறைகள், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட பாதுகாப்புகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை மாணவர்களிடத்தில் எடுத்துரைத்து வழக்குரைஞர் முருகேசன் பேசினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை வரலாற்றுத்துறை கவுரவ விரிவுரையாளர்கள் சஞ்சீவ்குமார் மற்றும் முனைவர் அம்பிகா ஆகியோர் செய்திருந்தனர். கவுரவ விரிவுரையாளர் பொன்னருவி நன்றி கூறினார்.

Related Stories: