ஆத்தூரில் நீர், மோர் பந்தல் திறப்பு

சின்னாளபட்டி, ஏப். 8:  ஆத்தூரில்  பிரசித்தி பெற்ற வண்டிகாளியம்மன் கோயிலில் திருவிழா நடந்து வருகிறது.  இந்நிலையில் கோயிலுக்கு வந்த திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,  எம்எல்ஏவுமான ன ஐ.பி.செந்தில்குமார் அம்மனை தரிசனம் செய்தார். தொடர்ந்து  திமுகவினர் சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைத்து  பொதுமக்களுக்கு நீர் மோர், தர்ப்பூசணி, மாதுளம், திராட்சை பழங்களை  வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ‘கிராமங்களில் அனைத்து சமுதாய மக்கள்  சார்பில் நடைபெறும் திருவிழாக்களில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள்  பயன்பெறும் வகையில் நீர், மோர் பந்தலை திறக்க வேண்டும்’ என்றார். இதில்  மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்  ஜம்ருத்பேகம், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் முருகன், நிர்வாகி ஹக்கீம்,  ஆத்தூர் கிளை செயலாளர்கள் சித்திரன், நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: