சென்னை மாநகராட்சி முழுவதும் புதைவட மின் கம்பிகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: சீரான மின்வினியோகம் செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் வரலாற்றில் ஒரே நேரத்தில் கடந்த ஆண்டு 216 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான உத்தரவை வழங்கினார். அதில் 193 துணை மின் நிலையங்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 23 துணை மின் நிலையங்களுக்கு இடங்கள் தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 8905 புதிய மின் மாற்றிகள் அமைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.625 கோடி நிதி வழங்கியுள்ளார்.

8905 புதிய மின் மாற்றிகள் 6 மாதத்தில் முழுமையாக 100 சதவீதம் பணிகள் நிறைவு செய்திருக்கிறது. அது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்வர இருக்கிறது. 216 துணை மின்நிலையங்கள் போக மீதி போக, மீதி அமைக்க வேண்டிய இடங்கள் எவை என்பதை துறை வாரியாக ஆய்வுகள் செய்யப்பட்டு அங்கு துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய இடத்திலும் ஆய்வுகள் செய்யப்பட்டு, தேவை ஏற்படின் அரசு பரிசீலிக்கும். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 5 கோட்டங்களில் புதிய புதைவட மின் கம்பிகள் அமைக்கக்கூடிய பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மீதமுள்ள கோட்டங்களில் விடுபட்ட பகுதிகளுக்கான திட்ட பணிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, இதுகுறித்து அறிவிப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. எனவே, சென்னை மாநகராட்சியில் உள்ள முழு பகுதிகளிலும் மின்பாதைகளை புதை வடங்களாக மாற்றிட வேண்டும் என்று முதல்வர் உத்தரவுகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: