×

நெத்திமேடு காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சேலம், ஏப்.7: சேலம் நெத்திமேடு காளியம்மன் கோயிலில் நேற்று காலை கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. சேலம் நெத்திமேட்டில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயிலில் உள்ளது. இக்கோயிலில் நேற்று (6ம் தேதி) கும்பாபிஷேக விழா நடந்தது.  இவ்விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசத்துடன் நான்காம் கால யாக பூஜை நடந்தது. 6.30 மணிக்கு தத்வார்ச்சனை, ஸ்பார்ஷாஹீதி, ஷண்ணவதி ஹோமமும், 9.15 மணி நான்காம் கால மஹாபூர்ணாஹீதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம்புறப்பாடு நடந்தது.

காலை 9.45 மணிக்கு மூலவர் விமான கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 10.10 மணிக்கு பரிவார ெதய்வங்கள் சகித மூலவர் காளியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்றனர். காலை 9 மணி முதல் ெநத்திமேட்டில் உள்ள மாணிக்கம்மாள் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தசதரிசனம், ஆசீர்வாதம் நடந்தது.
மாலை 6 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடந்தது.  விழாவிற்கான ஏற்பாடுகளை இறைமணி தலைவர் நெத்திமேடு. முத்து, செயலாளர் பெரியசாமி, பொருளாளர் வரதராஜன், கௌரவ தலைவர் சக்திவேல், துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், இணைச்செயலாளர்கள் மணி, செந்தில்குமார், ரவிச்சந்திரன், முருகன், பழனிசாமி, துணை செயலாளர்கள் உள்பட இறைபணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kumbabishekam Kolagalam ,Nethimedu Kaliyamman Temple ,
× RELATED எம்ஜிஆர் கழகம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்