×

ேபாடி அருகே விவசாய கண்காட்சி

போடி, ஏப். 7: போடி அருகே தருமத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விவசாய கண்காட்சி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, போடி உதவி வேளாண்மை அலுவலகம் சேர்ந்து நடத்தியது. கிராம தங்கல் திட்டத்தின் கீழ் 4ம் ஆண்டு மாணவிகள் அம்ருதா, ஆனி சுஜிதா, கீர்த்தனா, கார்த்திகா, சிவசக்தி, முகிலா ஆகியோர் சேர்ந்து புதிய தொழில் நுட்பங்களில் உருவாக்கிய பழமையும் கலந்த விவசாய கண்காட்சி திறக்கப்பட்டு விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அறிவொளியாக விவசாய தொழில் நுட்பங்கள், இயற்கை வேளாண்மை, பூச்சி மேலாண்மை பாரம்பரிய நெல் வகைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவியர், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bodi ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு