திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு

திருப்புத்தூர், ஏப்.7: திருப்புத்தூர் அருகே செவ்வூர் கிராமத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்புத்தூர் ஒன்றியம் செல்வூர் கிராமத்தில் நேற்று முன்தினம் முனீஸ்வரன், நாச்சியார் அம்மன், விநாயகர் கோயிலில் வழிபட்ட பின்னர் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதையொட்டி அப்பகுதியிலுள்ள வயக்காட்டு பொட்டலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து துண்டு, மாலைகள் அணிவித்து அலங்கரித்து கொண்டுவரப்பட்ட 100க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

இதில் இளைஞர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் காளைகளை பிடித்தனர். இதில் 10 இளைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்நிலையில், அரசு அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடத்தியதாக கூறி, செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்(55), சின்னையா(43), அன்புராஜ் (58), முத்தழகன்(48), சின்னையா(65) ஆகிய 5 பேர் மீது பூலாங்குறிச்சி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories: