நீர்ப்பாசன சங்கத்திற்கு ஏப்.10ல் தலைவர் தேர்தல்

திருவாடானை, ஏப்.7: திருவாடானை தாலுகாவில் நீர்ப்பாசன சங்க தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகிற 10ம் தேதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. திருவாடானை தாலுகாவில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை ஒருங்கிணைக்கவும் கண்மாய் ஷட்டர், மதகு போன்றவற்றை பராமரிக்கவும் நிதி ஆதாரத்தை திரட்டுதல், நீரை பங்கீடு செய்தல் போன்ற பணிகளுக்காக தாலுகாவில் 39 நீர்ப்பாசன சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறையினரும், வருவாய் துறையினரும் இணைந்து விண்ணப்பங்களை பெற்றனர். போட்டியின்றி 39 சங்கங்களுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்து வருகிற 10ம் தேதி தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

Related Stories: