×

சின்னாளபட்டி பேரூராட்சி கூட்டம்

சின்னாளபட்டி, ஏப். 7: சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் நடந்தது. தலைவர் பிரதீபா தலைமை வகிக்க, செயல் அலுவலர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் கலியமூர்த்தி வரவேற்க, கூட்ட பொருளை சசிக்குமார் வாசித்தார். கூட்டத்தில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட சொத்து வரி சீராய்வு செய்வதற்கான அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சியின் கடன் தொகை குறித்து விவாதம் வந்த போது, ‘ரூ.2 கோடியே 62 லட்சத்திற்கு கடன் பாக்கி வைத்துள்ளீர்கள். இந்த தொகை எப்படி வந்தது’ என கவுன்சிலர்கள் கேட்டனர். அதற்கு செயல்அலுவலர், பொது நிதியில் இருந்து நாம் செலவு செய்யும் போது கடன் ஏற்படுவது வாடிக்கைதான் என பதில் அளித்தார். 3வது தீர்மானமாக 2021-22ல் சொத்து வரி, தொழில் வரியை 100 சதவிகிதம் வசூல்பணி முடித்ததற்கு வரி தண்டலர்கர்கள் மூவருக்கு மிகை ஊதியம் வழங்குவதற்கு மன்றத்தில் ஒப்புதல் கேட்கப்பட்டது. அதற்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்தனர்.

அதன்பின் 3 தரைப்பாலங்கள் அமைப்பதற்கு கவுன்சிலர்கள் அனைவரும் ஏகமனதாக ஒப்புதல் அளித்தனர். இதில் கவுன்சிலர்கள் வேல்விழி, சங்கரேஸ்வரி, செல்வக்குமாரி, ஹேமா, ராஜசேகர், லட்சுமி, காமாட்சி, சாந்தி, ராஜாத்தி, ராசு, தாமரைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Chinnalapatti Municipality Meeting ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு