×

ஆய்வு அறிக்கையில் தகவல் மாநகராட்சி மத்திய மண்டல தலைவராக மீனா லோகு பதவி ஏற்றார்: மேயர், அரசியல் கட்சியினர் வாழ்த்து

கோவை, ஏப். 7: கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவராக மீனா லோகு பதவி ஏற்றார். இவருக்கு மேயர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவராக 46-வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். இவரது பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் உள்ள இவரது அறையில், மிக எளிய முறையில் பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு, மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மத்திய மண்டல உதவி கமிஷனர் சங்கர், உதவி பொறியாளர் புவனேஸ்வரி, கோவை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி, பெரியசாமி, எல்.பி.எப்., தொழிற்சங்கம் சார்பில் பெரியசாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் கணபதி சிவக்குமார், கொமதேக சார்பில் தனபால், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பிரபாவதி, மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், திமுக பகுதி செயலாளர் கோவை லோகு, திமுக நிர்வாகிகள் பசுபதி, சேதுராமன், மார்க்கெட் மனோகரன், பதுருதீன், முன்னாள் அரசு வக்கீல்கள் கே.எம்.தண்டபாணி, வக்கீல் பி.ஆர்.அருள்மொழி, முன்னாள் மண்டல தலைவர் பி.நாச்சிமுத்து, வடவள்ளி சண்முகசுந்தரம், கே.எம்.ரவி, கிறிஸ்துராஜ், அஞ்சுகம் பழனியப்பன், வெ.நா.உதயகுமார், சரவணம்பட்டி சிவா, கவுண்டம்பாளையம் மதி, புதூர் பாக்கியராஜ், சரண்யா செந்தில், ரங்கநாயகி, மரியராஜ், ராதாகிருஷ்ணன், பிரேம்குமார், மு.ரா.செல்வராஜ், பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் மாலதி (கல்விக்குழு), முபசீரா (வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு), சந்தோஷ் (நகரமைப்பு குழு), மாரிச்செல்வன் (சுகாதார குழு), தீபா இளங்கோ (கணக்கு குழு), சாந்தி (பணிக்குழு), ராஜேந்திரன் (நியமன குழு), கவுன்சிலர்கள் வைரமுருகன், பார்த்தீபன் பாபு, பிரபாகரன், சாவித்ரி, அன்னக்கொடி, ரேவதி, ஜெயப்பிரதா தேவி, ராஜேஸ்வரி, முனியம்மாள், வித்யா, கமலாவதி, சரவணகுமார், உமா செல்வராஜ், மனோகரன் சுமா, அலிமா பேகம் உள்பட பலரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதுபற்றி மண்டல தலைவர் மீனா லோகு கூறுகையில், ‘’எனது வார்டு மட்டுமின்றி, மண்டலம் முழுவதும் அன்றாடம் ஆய்வுசெய்து, மக்களின் அடிப்படை தேவை எது? என ஆராய்ந்து, முன்னுரிமை அடிப்படையில் அனைத்து பணிகளையும் செய்து கொடுப்பேன்’’ என்றார்.

Tags : Meena Loku ,Central Regional Chairman ,Information ,Corporation ,Mayor ,
× RELATED அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு