×

மேட்டமலை ஊராட்சி மன்ற தலைவர் செக் பவர் பறிப்பு கலெக்டர் உத்தரவு

சாத்தூர், ஏப்.5: மேட்டமலை கிராம ஊராட்சி மன்ற தலைவரின் செக் பவரை பறித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சாத்தூர் அருகே மேட்டமலை கிராம ஊராட்சி செயலர் கதிரேசன். இவர் புதிய கட்டிடம் கட்டுவதற்கு கட்டிட வரைபட அனுமதி கோரி விண்ணப்பத்திருந்த வசந்தியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு திருவில்லிபுத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இக்குற்றச் சம்பவம் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு விசாரணைக்குரிய ஆவணங்களை ஊராட்சிமன்ற தலைவர் வழங்க மறுத்ததால், 5 பேர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த விசாரணைக் குழு, மேட்டமலை ஊராட்சிமன்றத்திற்கு சென்ற போது ஊராட்சிமன்ற தலைவர் பார்த்தசாரதி அலுவலகத்தை பூட்டி சென்றுவிட்டார். எனவே கிராமநிர்வாக அலுவலர் முன்னிலையில் அலுவலகம் திறக்கப்பட்டது.
அப்போது ஊராட்சி தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் மாதாந்திர வரவு செலவு கணக்கினை ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, ஊராட்சிமன்ற தலைவர் அடிப்படை கடமைகளை புரிவதில் இருந்து தவறியதன் அடிப்படையில், ஊராட்சி நிர்வாக நலன் கருதியும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாகவும், மத்திய, மாநில அரசு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும் மேட்டமலை கிராம ஊராட்சியின் காசோலைகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் முதன்மை கையொப்பமிடும் அதிகாரமானது சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கி கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Mattamalai Panchayat ,President ,Czech ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்