×

பங்குனி பொங்கல் திருவிழா

கம்பம், ஏப்.5: கம்பம் வரதராஜபுரத்தில் விஸ்வகர்ம சமூகத்திற்கு பாத்தியப்பட்ட காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் விழா நடத்தப்படவில்லை. இந்தாண்டு, கொரோனா குறைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்கள் திருவிழா நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று முன்தினம் காலை பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் காமாட்சியம்மன் சுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உற்சவரை வைத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். கோயிலில் தொடங்கிய ஊர்வலம் ரேஞ்சர் ஆபிஸ் தெரு, மணி நகரம், பார்க் ரோடு, வேலப்பர் கோயில், அரசமரம், மாரியம்மன் கோயில், காளவாசல் வழியாக கோயிலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Panguni Pongal Festival ,
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...