×

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

சிவகங்கை, ஏப்.5: கொரோ னா பாதிப்பிற்கு பின் அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமரேசன், ஞானஅற்புதராஜ் மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என பள்ளிக்கல்வி அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக கல்வி துறையில் ஒவ்வொரு மட்டத்திலும் அதன் உட்கூறுகளை திணிப்பதில் அதீத கவனம் செலுத்தும் அதிகாரிகளின் செயல்களை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். இணையதள வசதியின்றி செயல்படும் ஆரம் ப, நடுநிலைப்பள்ளிகளின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் தகவல் தொழில்நுட்பம் மூலம் பள்ளி செயல்பாடுகளை அனு தினமும் மேற்கொள்ள செய்யும் கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளை தடுத்து, உண்மை நிலையினை அறிந்து உரிய தீர்வு காண வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின் அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் சத்துணவு வழங்கவும், காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான மாவட்ட மாறுதலை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Primary School Teachers' Alliance ,
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா