×

தென்னம்பாளையத்தில் கோவை பழமுதிர் நிலையத்தின் புதிய கிளை திறப்பு விழா

திருப்பூர், ஏப்.5: கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கோவை பழமுதிர் நிலையம் திருப்பூரில், லட்சுமிநகர், பி.என்.ரோடு , அவினாசி ரோடு காந்தி நகர், காங்கேயம் ரோட்டில் டி.எஸ்.கே. மருத்துவமனை எதிரில் என 3 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த கிளை தற்போது விரிவுப்படுத்தப்பட்டு, திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ஹெச்.பி. பெட்ரோல் பங்க் எதிரில் திறக்கப்படுகிறது. இதில் காய்கறிகள், பழங்கள், ஜூஸ் வகைகள், மளிகை பொருட்கள், வெளிநாட்டு பழவகைகள் என அனைத்தும் குறைந்த விலையில், ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில்  கோவை பழமுதிர் நிலையம் சூப்பர் மார்க்கெட்டாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்புவிழா நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. திறப்பு விழாவுக்கு கோவை பழமுதிர் நிலையத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் நடராஜன் தலைமை தாங்குகிறார். புதிய கிளையை நிறுவனர் நடராஜன் திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவையொட்டி குறிப்பிட்ட நாட்களுக்கு இருப்பு உள்ள வரை ஏராளமான சலுகைகள் வழங்கப்பட இருப்பதாக கோவை பழமுதிர் நிலையத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : Coimbatore Fruit Center ,Thennapalayam ,
× RELATED தென்னம்பாளையத்தில் தார்சாலை அமைக்க பூமி பூஜை