சிஐடியு தர்ணா போராட்டம்

கோவை, ஏப்.5:  கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) நிர்வாகிகள் மற்றும் கால் டாக்சி டிரைவர் முருகன் உள்ளிட்டோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. கோரிக்கைகள் குறித்து மனுவாக அளிக்கும்படி கூறினர். இது குறித்து சி.ஐ.டி.யு நிர்வாகிகள் கூறுகையில்,‘‘கால் டாக்சி டிரைவர் முருகன் கணபதியை சேர்ந்த ஒருவரின் நிறுவனத்தின் கீழ் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விசாரணைக்கு அழைத்து தாக்கி உள்ளனர். இதனால், அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: