×

இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட புளியங்குடி மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

புளியங்குடி, ஏப்.2: புளியங்குடி-டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டிக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நேற்று அதிகாலை 4.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவில் உறவின்முறை கமிட்டி தலைவர் ராமகிருஷ்ணனுடன் அனைத்து  நாட்டாண்மைகள், நிர்வாகிகள், வரிதாரர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இன்னிசை கச்சேரி, இசை பட்டிமன்றம், ஆடல் பாடல் நிகழ்ச்சி, திரைப்பட இன்னிசை கச்சேரி, சமுக சீர்திருத்த நாடகம், திருவிளக்கு பூஜை என பல்வேறு நிகழ்ச்சிகள் கட்டளைதாரர்கள் சார்பில் நடத்தப்படுகிறது.
10ம் திருவிழாவன்று பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு மூலவர் மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை தீர்த்தம் அழைப்பு, முளைப்பாரி, அக்னி காவடி, விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. 11ம் திருவிழாவன்று காலை பொங்கலிடுதல், மாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா வருதலும், இரவு கண்கவர் வானவேடிக்கையும் நடைபெறுகிறது. 12ம் திருவிழாவன்று காலை கொடி இறக்குதல், மஞ்சள் நீராட்டு விழா, பலி பீட பூஜை, மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது. விழாவில் புளியங்குடி, சிந்தாமணி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்வர்.

Tags : Panguni ,Puliyangudi Mariamman Temple ,
× RELATED கொடைக்கானலில் 22 ஆண்டுக்குப் பிறகு...