×

திருமயம் அருகே மெய்யபுரத்தில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் விநியோகம்

திருமயம், ஏப்.2: திருமயம் வேளாண்மைதுறை சார்பில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது.
ஒரு நாட்டின் வளர்ச்சியானது அந்நாட்டில் உள்ள தொழில் வளர்ச்சி மற்றும் விளை பொருட்கள் உற்பத்தியை பொறுத்தே அமைகிறது. இதில் முக்கியமாக பயிர்களில் நல்ல மகசூல் பெற நல்லமண் அடிப்படை காரணியாக அமைகிறது. எனவே மண்வளத்தை பாதுகாப்பதில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவே விவசாயிகள் உயர் விளைச்சல் ரகங்களை தொடர்ந்து சாகுபடி செய்து வருவதன் மூலம் முறையான வழியில் மண் வள பராமரிப்பு செய்யாததாலும் மண்வளம் குன்றி உற்பத்திதிறனும் குறைகிறது. ஆனால் கிராமங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் தங்களின் பொருளாதார அடிப்படையிலும் அனுபவ வாயிலாகவும், கூட்டு உரங்கள், கலப்பு உரங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாலும், பயிர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததாலும் பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டது.
இச்சூழ்நிலையில் நிலத்தின் வளத்தை சரிசெய்து சமன் செய்ய மண்வள அட்டை வழங்கும் திட்டத்தில் திருமயம் வட்டாரம் மெய்யபுரம் கிராமம் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமத்தில் விவசாயிகள் மேளா நடத்தப்பட்டது. இதில் மண்வளஅட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கி மண் ஆய்வக முடிவின் படி பரிந்துரைக்கப்பட்ட உரங்கள் விவசாயிகள் தங்கள் வயல்களில் எந்த முறையில் எந்த அளவில் இட வேண்டும் என்ற தொழில்நுட்ப கருத்துகளை வேளாண்மை உதவி இயக்குநர் உமா எடுத்து கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் திவ்யா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags : Meiyapuram ,Thirumayam ,
× RELATED திருமயம் அருகே டிரைவருக்கு திடீர் வலிப்பு பஸ் மரத்தில் மோதி நின்றது