×

வேப்பந்தட்டை அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

பெரம்பலூர்,ஏப்.2: வேப்பந்தட்டை அரசு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா வெங்கலம் கிராமத்தில் நடைபெற்றது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப்பணி திட்டமும், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டமும் இணைந்து நடத்திய ஏழு நாள் சிறப்பு முகாம் நிறைவு விழா வெங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முத்துராஜ் வரவேற்றார். ஏழு நாட்களின் நிகழ்வுகள் குறித்துத் திட்ட அறிக்கையை வாசித்து சமர்ப்பித்தார். இவ்விழாவிற்கு தமிழ்த்துறை தலைவர் சேகர் தலைமை வகித்து பேசினார். விழாவில் வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் நூத்தப்பூர் ராமலிங்கம், ஒன்றியக்குழு துணை தலைவர் வெங்கனூர் ரெங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். வெங்கலம் ஊராட்சி செயலாளர் ரவி, கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். ஆங்கில துறைத்தலைவர் மூர்த்தி கலந்துகொண்டு \”பெண்ணே நீ படைப்பின் மகுடம் \”என்னும் தலைப்பில் பேசினார். அதைத் தொடர்ந்து வெங்கலம் தாராபுரீஸ்வரர் கோவிலில் உழவாரப் பணியும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை நாட்டு நலப்பணித் திட்ட அலவலர் முத்துராஜ் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தினார்.

Tags : Government College ,
× RELATED தந்தை பெரியார் அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறை முப்பெரும் விழா