×

காரைக்கால் கடலோர காவல்படைக்கு கூடுதல் ரோந்து கப்பல்

காரைக்கால், ஏப்.2: இந்திய கடலோர காவல்படை காரைக்கால் மையத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் கூடுதலாக ரோந்து கப்பல் ஒன்று நேற்று முதல் பணியில் இணைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்தில், 2018ம் ஆண்டு இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்ட சி-436 என்ற ரோந்து கப்பல், நேற்று முதல் காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல் மையத்தில் இணைக்கப்பட்டு பணியில் ஈடுபடத் தொடங்கியது.
சி-436 ரோந்து கப்பலுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நாகை கலெக்டர் அருண் தம்புராஜ், காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா, இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், ரோந்து கப்பல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நவீன இயந்திர வசதிகளுடன் கூடிய இந்த ரோந்து கப்பலை எல் அன்ட் டி நிறுவனம் டிசைன் செய்து தயாரித்துள்ளது. 27.63 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரோந்து கப்பல் 45 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. உதவி கமாண்டன்ட் தலைமையில் 12 வீரர்கள் இதில் பணியாற்றுவர். தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாப்பு உள்ளிட்ட கண்காணிப்பு பணிகளில் இந்த ரோந்து கப்பல் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Karaikal Coast Guard ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ