×

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 வட்டார இயக்க மேலாளர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

கரூர், ஏப். 2: கரூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 3 வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 15 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டாரங்களில் காலியாகவுள்ள ஒப்பந்த அடிப்படையிலான 3 வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 15 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்து நியமனம் செய்யப்படவுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு தற்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமூதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்களாக பணியாற்றுபவர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கணக்காளர் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இதர முழு தகுதியுள்ள சமூதாய பொறுப்பில் உள்ள நபர் ஆகியோர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்,

வட்டார இயக்க மேலாளர்கள் நியமனத்திற்கு, பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல், குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் இதுபோன்ற திட்டஙகளில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். பணிபுரிந்த காலத்தில் நன்றாக பணிபுரிந்ததற்கு நற்பெயர் பெற்றவராக இருக்க வேண்டும். 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் (30.09.2021தேதியில்), சிறந்த தலைமைப் பண்பும் மற்றும் தகவல் தொடர்பாளராக இருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த திறமை உடையவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இருந்து இந்த பணியிடத்திற்கான பங்கேற்பிக்கு பரிந்துரை கடிதம், தீர்மானம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளாக்ள் நியமனத்திற்கு பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதற்கு மேல், குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் இதுபோன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவம், 35வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகன உரிமம் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இருந்து இந்த பணியிடத்திற்கான பங்கேற்பு பரிந்துரை கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அளவிலான கூட்டமைப்பின் வழியான ஒப்பந்த அடிப்படையில பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். இதில், வட்டார இயக்க மேலாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 15ஆயிரமும், வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாத மதிப்பூதியமாக ரூ. 12ஆயிரமும் வழங்கப்படும்.

இந்த தகுதி உள்ளவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் கரூர் அலுவலகத்தில் பெற்று, ஏப்ரல் 7ம்தேதி மாலை 5.45மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிட வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karur District ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...