சங்ககிரி பேரூராட்சியில் குழு உறுப்பினர்கள் நியமனம்

சங்ககிரி, ஏப்.2: சங்ககிரி பேரூராட்சிக்கு நியமன குழு, வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக திமுக வார்டு உறுப்பினர்களில் 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பேரூராட்சி தலைவர் மணிமொழி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், செயல் அலுவலர் சுலைமான் சேட், துணைத்தலைவர் அருண் பிரபு மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் நியமன குழுவுக்கு சின்னப்பொன்னு, வரிவிதிப்பு மேல் முறையீடு குழு உறுப்பினர்களாக கனகராஜ், சந்திரா, கங்காதேவி, குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மற்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: