பண்ருட்டி அருகே முந்திரி, பலா சிறப்பு மையம் மாநில இயக்குனர் ஆய்வு

கடலூர், ஏப். 2: பண்ருட்டி வட்டாரம் கீழகுப்பம் கிராமத்தில் அமைய உள்ள முந்திரி சிறப்பு மையம், பணிக்கன்குப்பம் கிராமத்தில் அமைய உள்ள பலா சிறப்பு மையம் மற்றும் வடலூர் அரசு தோட்டக்கலை பூங்கா இடங்களை தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி  பார்வையிட்டார்.

தோட்டக்கலை துறை நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு நன்கு சென்று அடையும் பொருட்டு சிறப்பாக செயல்பட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் அமைய உள்ள சிறப்பு மையங்கள் மற்றும் பூங்கா வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் திட்ட பணிகள் முடிக்கும் வகையில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தை சந்தித்து கடலூர் மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்ந்த நலத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். கடலூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) அருண், தோட்டக்கலை உதவி இயக்குனர் (நடவு பொருள்) சுரேஷ் மற்றும் ஏனைய தோட்டக்கலை துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: