×

திருவலம் பேரூராட்சியில் பணி நியமனம், வரிமேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் திமுகவினர் போட்டியின்றி தேர்வு

திருவலம், ஏப்.2: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில் வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கான தேர்தலும் நடந்து முடிந்து 15 வார்டுகளில் திமுக-9, அதிமுக-5, சுயேட்கை-1 என வெற்றி பெற்றனர். இதனையடுத்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 4வது நாளில் அதிமுக கவுன்சிலர்கள் வார்டு-13ல் மு.ஜெகதா, வார்டு-14ல் ச.ஜெயலட்சுமி, வார்டு-15ல் சுயேட்சை கவுன்சிலர் க.வினோத்குமார் ஆகிய 3 பேரும் சென்னையில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனால் திருவலம் பேரூராட்சியில் திமுகவின் பலம் 12ஆக உயர்ந்தது. இந்நிலையில் திருவலம் பேரூராட்சியில் பணிநியமனக்குழு மற்றும் வரிமேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்கள் தேர்வு கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் பேரூராட்சி கூட்ட அரங்கில் திருவலம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், செயல் அலுவலருமான ம.எழிலரசி தலைமையில், பேரூராட்சி தலைவர் ர.சாமூண்டிஸ்வரி, துணை தலைவர் கே.நேரு முன்னிலையில் நடந்தது.

Tags : Tiruvalam Municipality ,Appellate Committee on Taxation ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி