×

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு

ேவலூர், ஏப்.2:வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர், எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினர்.வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். இதில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் பங்கேற்று பேசினார். இதில், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பயனாளிகளுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 824 வீடுகள் கட்டி முடிக்காமல் நிலுவையில் உள்ளது. அதில் அணைக்கட்டு ஒன்றியத்தில் அதிகமாக உள்ளது. அவர்கள் அனைவரும் மலைக்கிராம மக்களாக உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்எல்ஏ நந்தகுமார் பேசுகையில், ‘இதை விரைவாக முடிக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள். மலைக்கிராமங்களில் நிலுவையில் உள்ள வீடுகளை கட்ட கலெக்டர் தலைமையில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வீட்டு உரிமையாளர்களிடம் தெரிவித்து வீடு கட்டும் பணியை விரைவுப்படுத்த வேண்டும். குருமலையில் சாலை பணியை தரமாக போட வேண்டும். இதை கலெக்டர் தலைமையில் வந்து நான் ஆய்வு செய்வேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு எம்எல்ஏ நிதியில் போட்ட சிமென்ட் சாலை மீது தற்போது மற்றொரு சாலை போட்டுள்ளனர். அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்’ என்றார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளும் திட்ட பணிகள், முடிந்த பணிகள், பணிகளின் முன்னேற்றம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி-2ஐ செயல்படுத்தும் ஊராட்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை வசதியை கவனமாக மேற்கொள்ள வேண்டும். பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Tags : Velur Collector's Office ,
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்