ஆலங்குளம் பேரூராட்சிக்கு கூடுதலாக தாமிரபரணி கூட்டு குடிநீர் விநியேகம்

ஆலங்குளம்,மார்ச் 31:  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வளர்ந்து வரும் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இங்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் பற்றாக்குறையாகவே கிடைத்து வருகிறது.  இதுகுறித்து பொதுமக்கள் புதிதாக பதவியேற்றுள்ள பஞ்சாயத்து தலைவி சுதாமோகன்லாலிடம் தங்களுக்கு கூடுதலாக குடிநீர் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். பஞ்சாயத்து தலைவர் இது குறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதனிடம் கூறினார். உடனே அவர் பஞ்சாயத்து தலைவருடன் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜை சந்தித்து ஆலங்குளம் பேரூராட்சிக்கு கூடுதலாக குடிநீர் வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தார். அப்போது கலெக்டர் விரைவில் கூடுதல் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். அப்போது மாவட்டச்செயலாளருடன் கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், முன்னாள் கவுன்சிலர் மோகன்லால் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: