ஏடிஎம்மில் கொள்ளை திட்டம் : 5 பேர் கைது

சிவகங்கை, மார்ச் 31: சிவகங்கையில் அரசு வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கல்லூரி அருகில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் நின்றிருந்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிவகங்கை நகர் போலீசார் அவர்களிடம் விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்ததில் கத்தி, வாள், மிளகாய் பொடி உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் சிவகங்கை, இந்திரா நகரை சேர்ந்த காசி(எ)காசிராஜன்(21), சுந்தரநடப்பு பிரவீன்குமார், இளையான்குடி அருகே மேலாயூரை சேர்ந்த அஜீத்குமார்(24), நாகமுகுந்தன்குடியை சேர்ந்த ரஞ்சித்(22) மற்றும் வடக்கு கீரனூரை சேர்ந்த பிளஸ் 1 மாணவர் என்பதும், கல்லூரி சாலையில் உள்ள அரசு வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து 5பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: