கண்மாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

திருப்பரங்குன்றம், மார்ச் 31: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான புளியங்குளம், தென்கால், சேமட்டான் குளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கலெக்டரின் வழிகாட்டுதலில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி, பணி ஆய்வாளர் வரத மூனிஸ்வரன் ஆகியோர் கண்மாய் ஆக்கிரமிப்பு பகுதிகளான நெல்லையப்பபுரம், சொர்ணம் காலனி ஆகிய இடஙகளில் உள்ள வீடுகளுக்கு 21 நாட்களுக்குள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி இறுதி நோட்டீஸ் வழங்கினர்.

Related Stories: