×

பழநி இஸ்லாமியர் அடக்கஸ்தலத்தில் புதிய மண் கொட்டும் பணி

பழநி, மார்ச் 31:     பழநி நகரில் இஸ்லாமியர்கள் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு பெரியப்பா நகர் பகுதியில் மயானம் ஏற்படுத்தப்பட்டுள்து. இம்மயானத்தில் தற்போது மண்ணின் தன்மை கெட்டு விட்டதாகவும், அருகில் குளம் இருப்பதால் புதைப்பதற்கு குழி தோண்டினால் தண்ணீர் வந்து விடுவதாகவும் புகார் எழுந்தது. இதனால் உடலை புதைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, மயானத்தில் புதிய மண் கொட்ட வேண்டும். சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென இஸ்லாமிய சமுதாய மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக வக்பு வாரிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் அடக்கஸ்தலத்தை பார்வையிட்டு சென்றனர். இதை தொடர்ந்து இஸ்லாமிய ஜமாத் சார்பிலேயே பொது நிதி திரட்டி, நீதிமன்ற உத்தரவை பெற்று தற்போது மண் அடக்கஸ்தலத்தில் மண் கொட்டி வருகின்றனர். இப்பணியை நேற்று நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி நிர்வாகம் சார்பில் சட்டத்திற்குட்பட்ட வகையில் உரிய உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். ஆய்வின்போது டவுன் முஸ்லீம் தர்ம பரிபாலன சங்க தலைவர் முகமது அலி, செயலாளர் லியாகத் அலி, துணை தலைவர் குல்முகமது, நிர்வாகக் குழு உறுப்பினர் ரம்ஜான்சேட், பசீர் அகமது, சிராஜ்தீன், பைஜல், கவுன்சிலர்கள் பாபு, வீரமணி, முருகபாண்டியன், திமுக நகர துணை செயலாளர் சக்திவேல், இளைஞரணி நிர்வாகி சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Palani Islamic Cemetery ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...