மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி

மன்னார்குடி, மார்ச் 31: இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலி யுறுத்துவதற்காக 2022-ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ‘எனது வாக்கு எனது எதிர்காலம்-ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப் பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்தி வருகிறது.அதில் ஒருபகுதியாக, தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரி வளாகத்தில் முதல்வர் ரவி தலைமையில் நேற்று நடந்தது. ஆங்கிலத்துறை பேராசிரியர் மாறன் போட்டிகளை துவக்கி வைத்தார்.விழிப்புணர்வு போட்டிகளின் நோக்கங்கள் குறித்து கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் வேலாயுதம் பேசினார். வாக்கின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடந்த வினாடி- வினா, ஒவியம், வாசகம் எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் திரளான மாணவ மாணவி யர் கலந்து கொண்டனர். வேதியியல் துறை பேராசிரியர் பாரதிராஜா வரவேற்றார். தாவரவியல் பேராசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Related Stories: